search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இயன் சேப்பல்"

    இந்தியாவின் பந்து வீச்சு பலம் வாய்ந்தது என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான இயன் சேப்பல் தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியில் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, குல்தீப் யாதவ், சாஹல், ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர், ஜடேஜா ஆகிய பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இதில் பும்ரா ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அபாரமாக பந்து வீசி வருகிறார்.

    இந்த சீசனில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவின் பந்து வீச்சு பலம் வாய்ந்தது என இயன் சேப்பல் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து இயன் சேப்பல் கூறுகையில் ‘‘உலகக்கோப்பையில் விளையாடும் இந்திய அணியின் பந்து வீச்சு பலம் வாய்ந்ததாக இருக்கிறது. வெவ்வேறு வகையில் வீசக்கூடிய திறமை வாய்ந்த பவுலர்கள் அந்த அணியில் உள்ளனர்.

    வேகப்பந்தில் முகமது ஷமி, பும்ராவும், சுழற்பந்தில் குல்தீப் யாதவும், சாஹலும் நேர்த்தியாக வீசக்கூடியவர்கள்’’ என்றார்.
    உலகின் பல வீரர்கள் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்வதில் வல்லவராக இருந்தாலும் டோனி தான் அதில் சிறந்தவர் என இயன் சேப்பல் கூறியுள்ளார். #MSDhoni #IanChappell
    புதுடெல்லி:

    இரண்டு உலக கோப்பையை வென்று இந்திய அணிக்கு பெருமை சேர்ந்தவர் டோனி.

    2007-ம் ஆண்டு அறிமுக 20 ஓவர் உலககோப்பையும், 2011-ம் ஆண்டு ஒருநாள் போட்டி உலககோப்பையும் அவரது தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.

    இந்திய அணியின் 3 நிலைக்கு கேப்டனாக ஜொலித்த டோனி 2014-ம் ஆண்டு இறுதியில் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர் ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டி கேப்டன் பதவியில் இருந்து விலகி அணியில் மட்டும் ஆடி வந்தார்.

    கடந்த ஆண்டு அவரது பேட்டிங் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இதனால் உலககோப்பை அணியில் அவர் தேவையா? என்ற விவாதம் எழுந்தது.

    ஆனால் இந்த ஆண்டு டோனியின் தொடக்கமே அமர்களமாக இருந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்ற டோனியின் ‘பேட்டிங்’ முக்கிய பங்கு வகித்தது.

    3 ஆட்டத்திலும் சேர்த்து 192 ரன்கள் குவித்தார். மூன்றிலும் அரைசதம் எடுத்து முத்திரை பதித்தார். இந்த சிறப்பான ஆட்டம் மூலம் அவர் தன்னை விமர்சனம் செய்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தார்.

    உலககோப்பை அணியில் அவர் இடம் பெறுவதை யாராலும் இனி தடுக்க இயலாது.

    இந்த நிலையில் ஒருநாள் போட்டியில், ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் இன்னும் உலகின் சிறந்த வீரராக டோனி இருக்கிறார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான இயன் சேப்பல் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    உலகின் பல வீரர்கள் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்வதில் வல்லவராக இருந்தாலும் டோனி தான் அதில் சிறந்தவர். டோனி ஆட்டத்தை முடிக்கும் திறமையில் இருக்கும் போது யாராலும் தடுக்க இயலாது.

    அவரது ஷாட்டுகள் மிகவும் அதிரடியாக இருக்கும். அவர் தனது தந்திரமான ஆட்டத்தை சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் சிறப்பாக கையாள்வதை பலமுறை நிரூபித்துவிட்டார்.



    ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் பெவன் 6-வது வீரராக களம் இறங்கி ஆட்டத்தை சிறப்பாக நிறைவு செய்வார். ஆனால் அவரையும் விட சிறந்தவராக டோனி இருக்கிறார்.

    பெவன் பவுண்டரி மூலம் தான் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பார். டோனி சிக்கர் மூலம் ஆட்டத்தின் தன்மையை மாற்றி வெற்றி பெற வைப்பார். விக்கெட்டுகளுக்கு இடையே ரன் எடுக்க ஓடுவதில் டோனி வல்லவர். 37 வயதிலும் அவரால் ரன் எடுக்க வேகமாக ஓட முடிகிறது. ஒருநாள் போட்டியில் டோனியின் ஆட்டம் மேம்பட்டு இருப்பதற்கு 20 ஓவர் போட்டியில் ஆடுவது காரணம். புள்ளி விவரப்படி டோனி தான் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் உலகின் சிறந்த வீரர்.

    இவ்வாறு இயன் சேப்பல் கூறியுள்ளார். #MSDhoni #IanChappell
    பென் ஸ்டோக்ஸிடம் இருந்து கற்றுக் கொண்டால் நிலைநாட்டிக் கொள்ள முடியும் என ஹர்திக் பாண்டியாவிற்கு இயன் சேப்பல் அறிவுரை கூறியுள்ளார். #HardikPandya
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று நான்கு நாட்களில் முடிவடைந்த இந்த ஆட்டத்தில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

    இதில் இங்கிலாந்தின் ஆல் ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் முதல் இன்னிங்சில் 21 ரன்னும், 2-வது இன்னிங்சில் 6 ரன்களும் எடுத்தார். ஆனால், முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கள் வீழ்த்திய அவர், 2-வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

    இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா முதல் இன்னிங்சில் 10 ஓவரில் 46 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் கைப்பற்றவில்லை. 2-வது இன்னிங்சில் ஓவர் வீசவில்லை. முதல் இன்னிங்சில் 22 ரன்களும், 2-வது இன்னிங்சில் 31 ரன்களும் அடித்தார்.

    இந்த தொடரில் ஹர்திக் பாண்டியா, அவரை நிலைநாட்டிக் கொள்ள பென் ஸ்டோக்ஸிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று இயன் சேப்பல் அறிவுரை வழங்கியுள்ளார்.

    இதுகுறித்து இயன் சேப்பல் கூறுகையில் ‘‘இந்திய அணி வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை தேடும் பணி இன்னும் நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. ஆனால், விராட் கோலியுடன் இணைந்து 2-வது இன்னிங்சில் ஹர்திக் பாண்டியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    ஹர்திக் பாண்டியாவை 6-வது இடத்தில் களம் இறக்கினால், அவருக்கு பேட்டிங்கில் நம்பிக்கை அதிகரிக்கும். அத்துடன் பென் ஸ்டோக்ஸின் பந்து வீச்சை பார்த்து அதில் இருந்து பலன் அடைய முடியும். இது இந்த தொடரில் அவரை சிறந்த ஆல்ரவுண்டாக நிலைநாட்ட உதவும்’’ என்றார். #HardikPandya
    ×